FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விடாமுயற்சி அப்டேட்!

16 ஜூன் 2024, 4:06 pm IST
பகிர்:

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.

துணிவு வெளியாகி ஓராண்டைக் கடந்த நிலையில், இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பிலேயே இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர்கள் அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின், படத்தைக் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன், “விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மீண்டும் அஜர்பைஜனில் துவங்கும் என்றும் 20 - 30 சதவீத படப்பிடிப்பே மீதமுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments