மகாராஜா ரூ.50 கோடி வசூல்!
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.
படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டில் வெளியான படங்களில் இப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் வெளியான 6 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.