FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மாறுபட்ட கிளைமேக்ஸ்.. தெலுங்கிலும் முடிந்தது எதிர்நீச்சல் தொடர்!

எதிர்நீச்சல் போன்றே உப்பென்னா தொடருக்கும் ஏராளமான ரசிகர்கள்.

Updated On : 25 ஜூன் 2024, 4:41 pm IST
பகிர்:

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு வந்த எதிர்நீச்சல் தொடரும் முடிவுக்கு வந்தது. தெலுங்கில் உப்பென்னா என்ற பெயரில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர், மாறுபட்ட கிளைமேக்ஸ் உடன் முடிவு பெற்றது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர், உப்பென்னா என்ற பெயரில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரபானது. தமிழில் ஒளிபரப்பான இரண்டு மாதங்களில் தெலுங்கு மொழியிலும் மறுஉருவாக்கம் (ரீ-மேக்) செய்யப்பட்டது.

இயக்குநர் திருச்செல்வத்தின் இதற்கு முந்தைய தொடர்களும் தெலுங்கில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், எதிர்நீச்சல் தொடரும், தொடங்கிய இரு மாதங்களில் தெலுங்கில் தெலுங்கில் எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழில் எதிர்நீச்சல் / தெலுங்கில் உப்பென்னா தொடரின் போஸ்டர்கள்

எதிர்நீச்சல் போன்றே உப்பென்னா தொடருக்கும் ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தியும், குடும்பத்தின் ஆண்களின் பிற்போக்குத் தனங்களை சுட்டிக்காட்டியும் இத்தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டது.

தமிழில் 740 எபிஸோடுகளுடன் முடிந்த இந்தத் தொடர், தெலுங்கிலும் இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. எதிர்நீச்சல் தொடரின் மறு உருவாக்கம் என்றாலும், தமிழில் இருந்த கிளைமேக்ஸ் உப்பென்னா தொடரில் வைக்கப்படவில்லை.

தமிழ் - தெலுங்கு கிளைமேக்ஸ் காட்சிகள்

உப்பென்னா தொடரில் நான்கு நாயகிகளின் கணவரும் மனைவியின் கனவுகளுக்கு துணையாக இருப்பதைப்போன்று கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டது. இதனால் எதிர்நீச்சல் தொடரின் ரசிகர்களும் உப்பென்னா தொடரின் கிளைமேக்ஸ் காட்சிக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments