4ஆவது குழந்தைக்குத் தாயான பிரபல ஹாலிவுட் நடிகை!
பிரபல ஹாலிவுட் நடிகை கால் கடோட் 4வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை கால் கடோட் 4வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
ஃபாஸ்ட் அண்ட் புரியஸ் படங்களின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கால் கடோட். பின்னர் வொண்டர் வுமன் படத்தின் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். இஸ்ரேலிய நடிகையான கால் கடோட் 2008இல் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜரோன் வர்சனோவை திருமணம் செய்துகொண்டார்.
38 வயதான இவருக்கு தற்போது 4ஆவதாக குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய இனிமையான பெண்ணே வருக. கர்ப்பமாக இருப்பது என்பது எளிதானதல்ல; ஆனால் நாங்கள் அதை எளிதாக முடித்தோம். எபிரேய மொழியில் 'எனது ஒளி' என்று பொருள்படும் ஓரி என்ற உனது பெயருக்கு ஏற்றவாறு எங்கள் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளாய். எங்கள் இதயங்கள் நன்றியினால் நிறைந்துள்ளன. பெண்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். அப்பாவும் அழகாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
ஹிந்தி நடிகை ஆலியா பட் உடன் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தினை தயாரித்து உடன் நடித்திருந்தார். ஸ்னோவ் அண்ட் ஒயிட் படம் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.