பிரபல தமிழ் நடிகைக்குத் திருமணம்!
தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமடைந்த நடிகை திருமணம் செய்துள்ளார்.
தமிழில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. தொடர்ந்து, லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி, இசை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
முக்கியமாக, மருதமலை படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளால் கவனிக்கப்பட்டவர்.
சில ஆண்டுகளாகத் தொழிலதிபர் ரக்ஷித் கேஜரிவாலைக் காதலித்து வந்த நிலையில், நேற்று (மார்ச்.12) இருவரும் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.