முகப்பு
செய்திகள்

ரோமியோ படத்தின் ‘வெத்தல’ பாடல்!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 மார்ச் 2024, 9:33 pm IST
பகிர்:

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடித்து வருகிறார். நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.

Advertisement

Advertisement

விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படம் கோடை வெளியீடாக திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலிரவின்போது நாயகனுக்கு பாலுக்குப் பதிலாக மதுவை ஊற்றிக்கொடுக்கும் நாயகி என சுவாரஸ்யமான இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் வெத்தல பாடல் வெளியாகியுள்ளது. பரத் தனசேகர் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments