கோட் படத்தில் த்ரிஷா!
நடிகர் விஜய்யின் கோட் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளதாகத் தகவல்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.
Advertisement
Advertisement
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை த்ரிஷா இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக, த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.