செய்திகள்

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கேக்கில் எல்சியூ, டிசி உடன் துப்பாக்கி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளுக்கு இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளுக்கு இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு  லோகேசஷ நன்றி தெரிவித்தார். அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு எல்சியூ குறும்படம் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ வசனகர்த்தாவும் இயக்குநருமான ரத்னகுமார் தனது எக்ஸ் பதிவில் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கேக்கில் எல்சியூ, டிசி என எழுதப்பட்டுள்ளது. உடன் துப்பாக்கி வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளது. டிசி திரைப்படங்கள் லோகேஷுக்கு மிகவும் பிடித்தமானது. எல்சியூ அவர் உருவாக்கியுள்ள சினிமாட்டிக் யுனிவர்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT