முகப்பு
செய்திகள்

கார்த்தி 26: ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நடிகர் கார்த்தியின் 26ஆவது படத்தினை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Updated On : 20 மார்ச் 2024, 2:16 pm IST
பகிர்:

நடிகர் கார்த்தியின் 26ஆவது படத்தினை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றன. அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ பட வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றன. இது கார்த்தியின் 25-வது படமாகும்.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். 

Advertisement

இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில்,  இப்படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் கார்த்தியின் 26வது பட ஓடிடி உரிமத்தினை கைப்பற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.