FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

29 மார்ச் 2024, 2:24 pm
பகிர்:

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ஏப்.22ஆம் தேதி படத் தலைப்பின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.