முகப்பு
செய்திகள்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 29 மார்ச் 2024, 5:26 pm IST
பகிர்:

‘மார்க் ஆண்டனி’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள் திரைப்படம் ரத்னம். இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

மேலும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

Advertisement

Advertisement

ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடலான ‘எதனால’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விவேகா வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தினை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.