செய்திகள்

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

DIN

நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்த இனிமேல் பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று (மார்ச்.28) மாலை ரஜினி 171 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதன் படத்தலைப்பு டீசர் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் நடிகை ஸ்ருதி ஹாசனின் பாடலில் லோகேஷ் கனராஜ் நடித்துள்ளார்.

ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்த இனிமேல் நல்ல கவனம் பெற்றது.

குறிப்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக ரொமொன்ஸில் அசத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்ற மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

SCROLL FOR NEXT