முகப்பு
செய்திகள்

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் படத்தினை புகழ்ந்து பேசியுள்ளார் இயக்குநர் ஜியோ பேபி.

Updated On : 2 மே 2024, 4:08 pm IST
பகிர்:

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபஹத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் முதல் 5 நாள்களில் ரூ. 50 கோடியைக் கடந்து சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியது. தற்போது ரூ.135 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தி கிரேட் இந்தியன் கிட்சன், காதல் தி கோர் படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஜியோ பேபி, “ஆவேஷம் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

குறிப்பாக கடைசியில் ஃபகத் ஃபாசில் எமோஷன்லாக சிறுவர்களை நோக்கி ஓடிய காட்சிகள் பிடித்தன. ஆரம்பத்தில் ரங்கன் எனும் கதாபாத்திரம் எப்படி காட்டப்பட்டது. இறுதியில் எப்படி மாறியது என்பது அழகாக இருந்தது. படம் முடிந்து கிரிடிட்ஸ் வரும்போது நான் அழத்தொடங்கியிருந்தேன்” என்று ஆவேஷம் படம் குறித்து பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments