நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!
நெல்சன் திலீப் குமார் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. இவர் அடுத்ததாக, ஜெயிலர் - 2 படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இவரின் முதல் படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. அதில், நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
‘பிளடி பெக்கர்’ படத்தின் ப்ரோமோ விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.