முகப்பு
செய்திகள்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓடிடியில் ரத்னம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 மே 2024, 1:49 pm IST
பகிர்:

‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்த மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரத்னம் திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ. 20 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.