முகப்பு
செய்திகள்

குட் பேட் அக்லி - ஓடிடி உரிமத் தொகை இவ்வளவா?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 22 மே, 2024 at 12:21 PM
பகிர்:
Updated On : 22 மே, 2024 at 12:12 PM

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அதேநேரம், விடாமுயற்சி திரைப்படமும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.95 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, நடிகர் அஜித் குமார் படங்களிலேயே ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான படம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.