FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 24 மே 2024, 4:06 pm IST
பகிர்:

நடிகை டெல்னா டேவிஸ் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா டேவிஸ்.

இவர் விடியும் வரை பேசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, ஆக்கம் மற்றும் குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அன்பே வா தொடரில் பூமிகா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகை டெல்னா டேவிஸ். பின்னர், இத்தொடரில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்தார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரில் டெல்னா டேவிஸ் - சல்மானுல் பாரிஸ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்தொடரின் படப்படிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், எம்ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் டெல்னா டேவிஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்குகிறார். எம்ஆர் பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை மகேந்திரன் தயாரிக்கிறார்.

எம்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments