FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்கேம் 2010 புதிய தொடர் அறிவிப்பு! இம்முறை இவரா?

ஸ்கேம் தொடரின் புதிய சீசன் அறிவிப்பு...

- sony liv
பகிர்:

ஹன்சல் மேத்தா இயக்கிவரும் ஸ்கேம் தொடரின் புதிய சீசன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கேம் 1992, ஸ்கேம் 2003 ஆகிய தொடர்களை இயக்கியவர் ஹன்சல் மேத்தா. முதல் ஸ்கேமில் நாட்டையே உலுக்கிய பிரபல பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தாவின் கதை கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து வெளியான ஸ்கேம் 2003-ல் போலி முத்திரைத்தாள் தயாரித்து விற்பனை செய்ததன் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வரை மோசடி செய்த அப்துல் கரீம் தெல்கியின் வாழ்க்கையைப் பதிவு செய்தனர்.

Advertisement

Advertisement

தற்போது, ஹன்சல் மேத்தா இயக்கத்தில் ஸ்கேம் 2010 என்கிற தொடர் உருவாகியுள்ளது. இதில், மறைந்த தொழிலதிபர் சுப்ரதா ராய் (Subrata Roy) கதையைக் கூறியுள்ளனர். பிரபலமான தொழிலதிபரான இவர் இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமங்களில் ஒன்றாக விளங்கிய சஹாரா குழுமத்தின் (Sahara Group) நிறுவனர் மற்றும் தலைவராக அறியப்பட்டவர்.

சஹாரா நிறுவனத்தின் இரண்டு நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு முரணான பத்திரங்கள் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து பெருமளவு பணம் திரட்டியதாக இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI வழக்குத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய விவகாரத்தில், 2014-ல் சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்பட்டார். 2016-ல் பிணையில் வெளியே வந்தார். பின், 2023 ஆம் ஆண்டு காலமானார்.

தற்போது, இந்த விவகாரத்தை வைத்து ஸ்கேம் 2010 தொடர் உருவாகியுள்ளது. சுப்ரதா ராயாக நடிகர் சித்தார்த் போத்கே நடித்துள்ளார். இது சோனி லைவ் ஓடிடியில் வருகிற ஜனவரி மாதம் வெளியாகிறது.

A new season of the 'Scam' series, directed by Hansal Mehta, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments