முகப்பு
செய்திகள்

கோட் - 3 தோற்றங்களில் விஜய்?

நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 மே 2024, 11:42 am IST
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கோட் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் முடிந்துள்ளது. இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பும் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இரண்டு தோற்றங்களில் இருக்கும் விஜய் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

தற்போது, மூன்றாவது தோற்றம் குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.