தீர்க்கதரிசியா வெங்கட் பிரபு? கோட் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு விடியோ!
முதல்வர் விஜய் நடித்த கோட் படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து...
முதல்வர் விஜய் நடித்திருந்த கோட் படம் வெளியாகி, இன்றுடன் (செப். 5) 2 ஆண்டுகள் நிறைவடைந்ததாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு விடியோ வெளியிட்டுள்ளார்.
கோட் படத்தின் காட்சிகள், திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் உள்பட, விஜய் முதல்வரான பிறகு எடுக்கப்பட்ட சட்டப்பேரவை காட்சிகளையும் கோட் படத்தின் 2 ஆண்டுகள் நிறைவு விடியோவில் இணைத்துள்ளார்.
முதல்வர் விஜய், தவெக தொடங்கிய நேரத்தில் இந்தப் படம் வெளியான நிலையில், படத்தின் ஒரு காட்சியில் காட்டப்பட்ட காரில் வாகன எண் பலகையில் 2026 ஆம் ஆண்டின் முதல்வர் என்ற குறியீடும் இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியையும், முதல்வராக தற்போது விஜய் இருக்கும் நிகழ் காட்சியையும் இணைத்து விடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
2 Years of CM Vijay's GOAT Movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.