எம்புரான் வெளியீட்டுத் தேதி!
எம்புரான் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்தில், மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
வெளிநாடுகளைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வராக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.