முகப்பு
செய்திகள்

அமரன் ரூ. 150 கோடி வசூல்?

அமரன் வசூல் குறித்து...

Updated On : 4 நவம்பர் 2024, 11:48 am IST
பகிர்:

அமரன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியானது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

Advertisement

Advertisement

அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இப்படம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்களைத் தாண்டி நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல்வாதிகளும் படத்தை பாராட்டியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். விரைவில், ரூ.200 கோடியைத் தாண்டும் என விநியோகிஸ்தர்கள் கணித்துள்ளனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments