நயன்தாராவின் புதிய அவதாரம் - ராக்காயி டைட்டில் டீசர் வெளியீடு!
’ராக்காயி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.
நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படமான ‘ராக்காயி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், மூவிவெர்ஸ் இந்தியா மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள திரைப்படம் ‘ராக்காயி’.
பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
பீரியட் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
எடிட்டராக பிரவீன் ஆண்டனியும், ஒளிப்பதிவாளராக கௌதம் ராஜேந்திரனும் பணியாற்றியுள்ளனர்.
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளான இன்று படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.