முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் வீட்டின் அரசனாக மாறிய ராணவ்! ராணியாக சாச்சனா!

பிக் பாஸ் சீசன் 8 நிழ்ச்சியின் 45வது நாளில் பிக் பாஸ் வீட்டின் அரசனாக ராணவ் மாறியுள்ளார். ராணியாக சாச்சனா மாறியுள்ளார்.

Updated On : 20 நவம்பர் 2024, 4:01 pm IST
ராணவ், சாச்சனா
பகிர்:

பிக் பாஸ் சீசன் 8 நிழ்ச்சியின் 45வது நாளில் பிக் பாஸ் வீட்டின் அரசனாக ராணவ் மாறியுள்ளார். ராணியாக சாச்சனா மாறியுள்ளார்.

ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்றுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய டாஸ்க்கில் மன்னர் காலத்தில் இருந்ததைப் போன்ற சூழலை உருவாக்க வேண்டும்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வேடம் எடுத்து நடித்து வருகின்றனர். இதில், ஆண்கள் அணியின் ராணவ் அரசனாகவும், பெண்கள் அணியின் சாச்சனா ராணியாகவும் வேடமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதேபோன்று கேப்டன் மஞ்சரி படைத்தளபதியாகவும், செளந்தர்யா ராணியின் உதவியாளராகவும் வேடமிட்டுள்ளனர். ஆண்கள் அணியிலும் தளபதி, ராஜகுரு, படைத்தளபதி என பலரும் வேடமிட்டுள்ளனர்.

ராணியாக வேடமிட்டுள்ள சாச்சனாவை வரவேற்கும் விதமாக கிராம மக்கள் போன்று வேடமிட்டுள்ள ஜாக்குலின், ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா, சத்யா ஆகியோர் பாடல் ஒன்றைப் பாடினர்.

ஆண்கள் நாடு, பெண்கள் நாடு என இரு நாடுகள் உருவானதாக கதையைக் கூறி, இதில் ஆண்கள் நாட்டைக் கைப்பற்ற என்ன வழி என்ன உள்ளது என சூழ்ச்சி செய்வதைப் போன்று கதையை உருவாக்கி அதில், பிக் பாஸ் வீட்டினர் நடித்து வருகின்றனர்.

பள்ளிக்கூட டாஸ்க்கில் பலர் தங்கள் தனிப்பட்ட வன்மங்களையே காட்டியதால், மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை. எனினும் தற்போது மன்னர் காலத்தை மீட்டுருவாக்கம் செய்து அதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிறப்பாக நடித்து வருவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ்: 50வது நாளில் மீண்டும் நுழையும் பழைய போட்டியாளர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments