கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
சொர்க்கவாசல் படத்தில் ஜெயில் காட்சிகள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது...
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தைத் தமிழகத்தில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மூலமாக எஸ் ஆர் பிரபு ரிலீஸ் செய்கிறார்.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:
நான் இனிமேல்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ஆனால், ஜெயில் காட்சிகள் நன்றாக இருப்பதாகத் தெரிகின்றன. கைதி 2 படத்திலும் ஜெயில் காட்சிகள் இருக்கின்றன. சொர்க்கவாசல் படம் பார்த்துவிட்டு கைதி 2 படக் காட்சிகளை மாற்ற வேண்டியிருக்கும். ஏனெனில் அவ்வளவு வலுவான காட்சிகள் இருக்கின்றன என்றார்.
லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜி நெருங்கிய நண்பர்கள். ஆர்ஜே பாலாஜி பல நேர்காணல்களில் இது குறித்து பேசியுள்ளார்.
லோகேஷ் இயக்கிய படங்களில் துணைக் கதாபாத்திரத்துக்கு அழைத்தும் செல்லாதது குறித்து நேர்காணல்களில் பேசியிருந்தார். இந்தியன் 2 படத்தில் நடிக்காததுக்கு ஆர்ஜே பாலாஜி , “சிங்கத்துக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருக்கலாம்” எனப் பதிலளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.