FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வைரலாகும் ஏ. ஆர். ரஹ்மானின் ‘என்னை இழுக்குதடி’ பாடல்!

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் குறித்து...

Updated On : 23 நவம்பர் 2024, 5:12 pm IST
பகிர்:

காதலிக்க நேரமில்லை படத்திற்காக ஏ. ஆர். ரஹ்மான் பாடிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் "காதலிக்க நேரமில்லை".

ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் நேற்று (நவ. 22) வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர்.

பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. முக்கியமாக, 2கே ரசிகர்களிடமும் வைரலாகியுள்ளது.

”32 வருடமாகியும் கரையைக் கடக்காத ஒரே புயல், எங்கள் இசைப்புயல் மட்டுமே..” என பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments