40,000 திரைகளில் மகாராஜா!
சீன மொழியில் மகாராஜா திரைப்படம்
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் சீனாவில் 40, 000 திரைகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று அடத்தியது.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்?
தொடர்ந்து, நடிகர் அமீர் கான் நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற நவ. 29 ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தைப் பெற்ற அலிபாபா குழுமம் 40,000 திரைகளில் படத்தை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, இப்படம் இவ்வளவு திரைகளில் வெளியாகி வெற்றி பெற்றால் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.