நயன்தாரா பகிர்ந்த பழமொழி படம்: இன்ஸ்டா / நயன்தாரா.
செய்திகள்

கர்மா வட்டியுடன் உங்களை வந்தடையும்..! நயன்தாரா பகிர்ந்த பழமொழி!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கர்மா குறித்த பழமொழியினைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்கமால் காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார்.

நடிகை நயன்தாராவுக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தார்கள். சமீபத்தில் நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் தொடா்ந்த வழக்கில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “பொய்யின் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழித்தால் அது கடன்பெற்றதுபோல வட்டியுடன் உங்களை வந்தடையும்” என்ற பழமொழியைப் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா பகிர்ந்த பழமொழி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டையில் பரவலாக மழை

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற நடவடிக்கை! - தெற்கு ரயில்வே பொது மேலாளா்

வழக்குகளில் பறிமுதல் செய்த 44 வாகனங்கள் ஜன. 29-இல் ஏலம்!

தமிழக அரசுக்கு மா- விவசாயிகள் மீது அக்கறை இல்லை! - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

வாக்காளராக இருப்பது பெரும் பாக்கியம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT