45 வயதில் தாயானதை அறிவித்த நடிகை பத்மப்ரியா!
நடிகை பத்மப்ரியா தனது மகனுக்கு ஒரு வயதாகியதென அறிவித்தது குறித்து...
நடிகை பத்மப்ரியா தனது 45ஆவது வயதில் தனக்கு மகன் இருப்பதாகவும் அவருக்கு ஒரு வயது ஆகியதாகவும் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
சேரண் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் நடிகை பத்மப்ரியா தமிழில் அறிமுகமாகினார். பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என பல படங்களில் கவனம் பெற்றார்.
கடைசியாக பத்மப்ரியா ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிறகு 2014ல் ஜஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்ததும் தமிழில் நடிக்க வராமலேயே இருந்தார்.
Advertisement
Advertisement
தற்போது, தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் மகனுக்கு ஓராண்டு நிறைவடைந்ததாகக் கூறியுள்ளார். மீண்டும் 2022 முதல் நடிக்க தொடங்கியுள்ள பத்மப்ரியா ஒரு தெக்கன் தள்ளு கேஸ், வண்டர் வுமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பத்மப்ரியாவுக்கு பழசிராஜா படத்திற்காக சிறப்பு தேசிய விருது, கேரள விருதுகள் இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை யாருக்கும் அறிவிக்காத செய்தியைப் பகிர்ந்ததும் பலரும் நடிகை பத்மப்ரியாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
Actress Padmapriya announces motherhood at 45, reveals child has turned one
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.