மினி மகாராணி... விஜய் - 69 படத்தில் மமிதா பைஜூ!
விஜய் - 69 படத்தில் மமிதா பைஜூ இணைந்துள்ளார்,
விஜய் 69 படத்தில் மமிதா பைஜூ இணைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டேவும் படத்தில் இருப்பதை அறிவித்தனர்.
தற்போது, ’மினி மகாராணி’ எனக் குறிப்பிட்டு நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் இணைந்ததை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு அக். 5 ஆம் தேதி துவங்குவதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.