விவாகரத்துக்கு காரணம் அரசியல்வாதி? சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சரை எச்சரித்த சமந்தா!
நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணமென தெலங்கானா அமைச்சர் கேடிஆரை குறிப்பிட்டது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.
நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணமென தெலங்கானா அமைச்சர் கேடிஆரை குறிப்பிட்டது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
தற்போது, நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்தார்கள்.
Advertisement
Advertisement
விவாகரத்துக்கு காரணம் அரசியல்வாதியா?
இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, “பல பெண்கள் கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். போதைப்பொருள்களை உபயோகிக்கும் கே.டி.ஆர். பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்றார்.
இந்த விஷயம் பெரும் சர்ச்சையானது. இதற்கு நடிகர் நாகர்ஜுனா கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நடிகை சமந்தாவும் பதிலளித்துள்ளார்.
சமந்தா பதிலடி
அதில் சமந்தா கூறியதாவது:
ஒரு பெண்ணாக கிளாமரான இந்த சினிமா துறையில் வந்து பணியாற்றி தனது இடத்தை தக்கவைப்பது என்பது எவ்வளவு பெரியதென உங்களுக்கு தெரியுமா? காதலில் விழுவதும் பின்னர் அதிலிருந்து மீள்வதும்... பின்னர், அதிலிருந்து எழுந்து சண்டையிடுவதும் சாதாரணமானதல்ல. இதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் கொண்டா சுரேகா அவர்களே.
நான் இந்தப் பயணத்தில் என்னவாகியுள்ளேன் என்பது குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தயவுசெய்து இதை சிறுமைப்படுத்தாதீர்கள். அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கனம் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மரியாதையாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டுமென கெஞ்சிக் கேட்கிறேன்.
எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம். எங்களது விவாகரத்து இருவரும் சம்மதத்துடன் இணைந்து எடுத்த முடிவு. இதில் எந்த அரசியலும் இல்லை.
உங்களது அரசியல் சண்டையில் எனது பெயரை சேர்க்காதீர்கள். நான் எப்போதும் அரசியலற்றவர். அதிலேயே தொடரவும் விரும்புகிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.