சத்யராஜ் பிறந்தநாள்:லோகேஷ் கனகராஜ் வாழ்த்து!
கூலி படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் சத்யராஜுக்கு வாழ்த்து தெரிவித்தார் லோலேஷ் கனகராஜ்.
நடிகர் சத்யராஜ் தென்னிந்தியளவில் பிரபலமான நடிகர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இறுதியாக, இவர் நடித்த மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் (my perfectt husband) தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
Advertisement
Advertisement
தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படப்பிடிப்பில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “கூலி படத்தில் உங்களுடன் பணிபுரிவது உண்மையாகவே நல்ல அனுபவம். எனக்கும் கற்றுக்கொள்ளும் பயணமாக இருக்கிறது. எங்களைத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என வாழ்த்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.