FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹிந்தியில் அறிமுகமாகும் சூர்யா!

நடிகர் சூர்யாவின் பாலிவுட் படம் குறித்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியுள்ளார்.

Updated On : 5 அக்டோபர் 2024, 11:53 am IST
நடிகர் சூர்யா.
பகிர்:

நடிகர் சூர்யாவின் பாலிவுட் படம் குறித்து இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது.

தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவ.14ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா 44 படப்பிடிப்பு நிறைவடையும். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படப்பிடிப்பு இருக்கிறது. அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ இந்த ஹிந்திப் படம் என்பது இன்னும் முடிவாகவில்லை.

சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஐஐஎஃப்ஏ விழாவில் ஹிந்திய் இயக்குநரிடம் சூர்யா படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ், “100 சதவிகிதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்ணா என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல்.

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பாக் மில்கா பாக், தூஃபான் போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments