முகப்பு
செய்திகள்

பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன்!

ஜீவாவின் புதிய படம்...

Updated On : 8 அக்டோபர், 2024 at 7:50 AM
பகிர்:

நடிகர் ஜீவா, அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு அகஸ்தியா எனப் பெயரிட்டுள்ளனர். அறிவிப்பிற்கான போஸ்டரை பார்த்தால் இது சரித்தர கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதையும் படிக்க: த்ரிஷ்யம் - 3 அறிவிப்பு?

பாடலாசிரியராக வெற்றி பெற்ற பா. விஜய், இளைஞன் படத்தில் நாயகனாக நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது, இயக்குநராக பெரிய பட்ஜெட் படத்தை இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.