செய்திகள்

குட் பேட் அக்லி படப்பிடிப்பு தீவிரம்!

DIN

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் காரில் வந்து இறங்குவது போன்ற காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. வழக்கமான தோற்றத்தை மாற்றி தலைமுடிக்கு சாயம் அடித்துள்ள அஜித்தின் அந்த விடியோ ரசிகர்களிடம் பெரிதாக வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேண்டும் இந்த விதிமுறைகள்!

வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

SCROLL FOR NEXT