பிரேக்கிங் பேட் நடிகர் ஆர். ஜே. மிட் மறைவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் ஆர். ஜே. மிட் உயிரை மாய்த்துக்கொண்டார்...
பிரேக்கிங் பேட் தொடர் மூலம் உலக அளவில் பிரபலமடைந்த நடிகர் ஆர். ஜே. மிட் காலமானார்.
உலகம் முழுவதிலும் இதுவரை வெளியான தொடர்களில் பிரேக்கிங் பேட் (breaking bad) தொடர்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பிய தொடராக முதலிடத்தில் உள்ளது. இதில், வால்டர் வொயிட் என்கிற மைய கதாபாத்திரத்தின் மகன் ஜூனியர் வால்டர் ஒயிட் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஆர். ஜே. மிட்.
இத்தொடரில் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவராக நடித்து பலரையும் மிட் கவர்ந்திருந்தார். உண்மையிலேயே, மிட் இந்த உடல் சிக்கல்களுடனே இருந்தார். தொடர்ந்து, சில ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆர். ஜே. மிட் (34) அமெரிக்காவில் தன் உயிரை மாய்த்துகொண்டார். இச்சம்பவம் ஹாலிவுட் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரேக்கிங் பேட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்கிற கோணத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறார்.
Actor RJ Mitte, who gained global fame through the series Breaking Bad, has passed away.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.