பேபி ஜான்: ஜாக்கி ஷெராஃப் போஸ்டர்!
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் ஜாக்கி ஷெராஃப்பின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி.
நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1,140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. ரூ.3,000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
தற்போது, அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வருகிறார்.
வருண் தவான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். காளிஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வரும். இந்நிலையில் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப்பின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.