FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சௌபின் சாகிர் பிறந்தநாள்: லோகேஷ் கனகராஜ் வாழ்த்து!

நடிகர் சௌபின் சாகிருக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்...

Updated On : 12 அக்டோபர் 2024, 3:48 pm IST
சௌபின் சாகிர், லோகேஷ் கனகராஜ்.
பகிர்:

கூலி படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் சௌபின் சாகிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் லோலேஷ் கனகராஜ்.

நடிகர் சௌபின் சாகிர் தென்னிந்தியளவில் பிரபலமான நடிகர். மலையாள சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவரே தயாரித்து, நடித்த மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மலையாள சினிமாவுக்கு புதிய சாதனை பெற்றுத்தந்தது. தொடர்ந்து, டொவினோ தாமஸுடன் நடிகன் படத்தில் நடித்தார். அப்படம், தோல்விப்படமானது.

Advertisement

Advertisement

தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் தயாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படப்பிடிப்பில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “கூலி படத்தில் உங்களுடன் பணிபுரிவது சிறந்த அனுபவம். பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments