சூர்யாவுடன் மோதும் சூர்யா விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ள திரைப்படம் கங்குவாவுடன் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கோட் வசூல் வெற்றியைக் கொண்டாடிய விஜய்!
இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றே, நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகிறது. நாயகனாக அறிமுகமாகும்போதே நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.