நடிகர் கமல்ஹாசன். 
செய்திகள்

புதிய தோற்றத்தில் கமல்ஹாசன்... எந்தப் படத்திற்காக?

வைரலாகும் கமல்ஹாசன்...

DIN

நடிகர் கமல்ஹாசனின் புதிய தோற்றம் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்திற்குப் பின் தனக்கான வணிகத்தை பெரிதாக உருவாக்கியுள்ளார். இந்தியன் - 2 கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அது தன்னை பாதிக்காததுபோல் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து, கமல்ஹாசன் யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் கமல்ஹாசனை வைத்து அவரது 237- வது படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தனர். அப்படம் ஜனவரி மாதம் துவங்கும் என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், ’புதிய தோற்றம், புதிய பயணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், கமலின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT