முகப்பு
செய்திகள்

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படம் அறிவிப்பு!

சூர்யா - 45 அப்டேட்...

செய்திகள்

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படம் அறிவிப்பு!

சூர்யா - 45 அப்டேட்...

Updated On : 19 அக்டோபர், 2024 at 10:48 AM
பகிர்:

சூர்யாவின் 45-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் புதிய தகவல் வெளியானது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நாயகனாக நடிக்கும் அவரது 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர். ஜே. பாலாஜி, சூர்யாவை இயக்கவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →