வா வாத்தியார் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!
வா வாத்தியார் வெளியீடு குறித்து...
கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.
தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும்: ஞானவேல் ராஜா
இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.