ரெட்ட தல படப்பிடிப்பு நிறைவு!
ரெட்ட தல படப்பிடிப்பு நிறைவு...
நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது.
அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த படம் எது? அப்டேட் கொடுத்த சிம்பு!
சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.
படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. தற்போது, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.