அருண் விஜய்யின் இருளன் சிறப்பு போஸ்டர்!
இருளன் சிறப்பு போஸ்டர்கள்...
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் இருளன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ’இருளன்’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் ஆக்ஷன் கதையாக அதிக சண்டைக் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.
Advertisement
Advertisement
சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். தற்போது, மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
இந்த நிலையில், நடிகர் அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இத்திரைப்படத்திற்கான சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். பிரிட்டிஷ் கால அதிகாரிகள் முன் அருண் விஜய் கைதாகி அமர்ந்திருக்கும் தோற்றம் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.