Vijay TV
செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி? போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸ் சீசன் 8 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் பற்றி...

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

நான்காவது வாரத்தில் 15 பேர் மட்டுமே வீட்டில் உள்ள நிலையில், இந்த வாரம் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சீசனில் ஆண்கள், பெண்கள் என்ற வகையில் இரு வீடாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சீசன்களை போன்று சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியும் போட்டியாளர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

சக போட்டியாளர்கள் மீதான கருத்துகளை அனைவரும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி நேற்றைய நிகழ்ச்சியில்கூட தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸில் மேலும் சுவாரஸ்யத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

போட்டியாளர்களுக்கு கொடுக்கும் சமையல் பொருள்கள் வாங்குவதற்கான டாஸ்ல், கேப்டன்சி டாஸ்க், வீட்டு வேலைக்கான டாஸ்க், நாமினேஷன் டாஸ்க் உள்ளிட்டவையை மேலும் கடினமாக்கி சுவாரஸ்யத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறுதியை உடைக்கும் விதமாக, வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களை இந்த வாரமே உள்ளே அனுப்ப பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் அர்ணவ்வின் முன்னாள் மனைவி திவ்யா, குக் வித் கோமாளி ஷாலின் சோயா, விஜய் டி டி.எஸ்.கே, பாடகி ஸ்வாகதா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழையவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மா்ம மரணம்: விசிக, புரட்சி பாரதம் கட்சியினா் போராட்டம்

டபிள்யுடிடி சென்னை கன்டென்டா்: இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு வைல்ட் காா்ட்

டேக் டெவலப்பா்ஸ் விளம்பரத் தூதராக ஏ.ஆா்.ரஹ்மான்

ஹெலிகாப்டா் தயாரிப்பிலும் தடம் பதிக்கும் அதானி குழுமம்- லியோனாா்டோ நிறுவனத்துடன் கைகோா்ப்பு

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் காலி மதுபாட்டில்களை தனியாரிடம் வழங்க முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT