பிக் பாஸ் 10: இந்த வார இறுதியில் வைல்டு கார்டு மூலம் வரும் 3 போட்டியாளர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்து....
இந்த வார இறுதியில் வைல்டு கார்டு மூலம் 3 புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நான்காவது வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் முந்தைய சீசன்கள்போல இல்லாமல், வித்தியாசமான பாணியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார், ஆனந்தி ஆகிய 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதனிடையே எதிர்பாராத திருப்பமாக லீடர் எவிக்ஷன் புராசஸில் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவித், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைத் தந்தனர்.
இவர்கள் மூவரும் ஏற்கெனவே வீட்டிலிருக்கும் மோசமாக விளையாடும் ஒரு போட்டியாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கயிறு மூலம் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, லட்சுமி பிரியா, குமரனுடன், சவின்யா, அஸ்மிதாவுடன், ஜாவேத் ஷெரிப், தன்யாவுடன் இணைக்கப்பட்டனர். இந்த ஆறு போட்டியாளர்களில் மூவர் மட்டுமே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் போட்டியாளர்கள் பட்டியலில் இவர்கள் 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நடிகர் குமரன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
மேலும், இவர்களில் 5 பேரில் இருந்து இருவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். வைல்டு கார்டு மூலம் வரும் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியை தொடர்வார்கள்.
வரும் அக். 4 ஆம் தேதி மூவர் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்று முன்னோட்டக் காட்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Three new contestants are set to enter the Bigg Boss show this weekend via the wild card entry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.