FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் 10: போட்டியாளர்களின் வன்மத்தால் வீழ்த்தப்பட்ட வினோத் பாபு!

ஜூனியர் பிக் பாஸாக தேர்வாகியுள்ள வினோத் பாபுவை சக போட்டியாளர்கள் சேர்ந்து அப்பதவியில் இருந்து நீக்கியது குறித்து...

வினோத் பாபு - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜூனியர் பிக் பாஸாக தேர்வாகியுள்ள வினோத் பாபுவை சக போட்டியாளர்கள் சேர்ந்து அப்பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளனர்.

ஜூனியர் பிக் பாஸாக இருப்பவர் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதி உடையவர் என்பதால், அவருக்கு அந்த சலுகை கிடைக்கக் கூடாது என்பதற்காக, சக போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து அவரை நீக்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் தலைவராக ஜேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஷாதிகா உள்ளார்.

பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பிக் பாஸ் குரல் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கி வருகிறது. பிக் பாஸ் திரும்ப வரும்வரை போட்டியாளர்களில் ஒருவர் ஜூனியர் பிக் பாஸாக இருக்கலாம் என விதி வகுக்கப்பட்டுள்ளது

ஜூனியர் பிக் பாஸ் பொறுப்புக்கு ஜேசன், ஷாதிகா, முத்தழகி, தன்யா, வினோத் பாபு, டிடிஎஃப் வாசன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து வினோத் பாபுவை ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்தனர்.

ஜூனியர் பிக் பாஸாக இருப்பவருக்கு நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

மேலும், ஜூனியர் பிக் பாஸ் பொறுப்பில் இருப்பவரை பிடிக்கவில்லை என்றால், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து மாற்றலாம் என்றும், ஒருவர் உடன்படவில்லை என்றால் கூட மாற்ற முடியாது என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஜூனியர் பிக் பாஸாக நீடித்தால் வினோத் பாபு நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடுவார் என்பதால், அவரை அப்பதவியில் இருந்து சக போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து நீக்கியுள்ளனர்.

ஜூனியர் பிக் பாஸாக சிறப்பாக வினோத் பாபு செயல்பட்டதாகவும், பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாமல் போட்டிகளை வைத்ததாகவும் போட்டியாளர்களையும் சிறப்பாக வழிநடத்தியதாகவும் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கொடுக்கப்பட்ட பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தவரை எந்தவொரு நேர்மையான காரணமும் இல்லாமல் போட்டியாளர்கள் சேர்ந்து ஜூனியர் பிக் பாஸ் பொறுப்பில் இருந்து வினோத் பாபுவை நீக்கியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

summary

Bigg Boss 10: Vinoth Babu ousted due to the hostility of fellow contestants!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.