ஜூனியர் பிக் பாஸாக மாறிய வினோத் பாபு! யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிக் பாஸ் குரலுக்கு பதிலாக வினோத் பாபுவின் குரல் ஒலித்து வருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிக் பாஸ் குரலுக்கு பதிலாக வினோத் பாபுவின் குரல் ஒலித்து வருகிறது. வீட்டில் உள்ள சக போட்டியாளர்களால் ஜூனியர் பிக் பாஸாக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் இடத்தில் இருந்து வினோத் பாபு குரல் கொடுத்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 10 நிக்ழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான தலைவராக ஜேசன் கெளசி தேர்வு செய்யப்படுள்ளார். துணைத் தலைவராக நடிகை ஷாதிகா உள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் புதிய விதிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியுள்ளது. அதாவது, பிக் பாஸ் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே எதிர்பாராத திருப்பமாக பிக் பாஸ் குரல் இனி ஒலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ள போட்டியாளரில் ஒருவரை ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் பிக் பாஸ் இடத்தில் இருந்து போட்டியாளர்களை வழிநடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், போட்டியாளர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் அதற்காக ஜூனியர் பிக் பாஸை போட்டியாளர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்படி வீட்டின் ஜூனியர் பிக் பாஸ் பொறுப்புக்கு வினோத் பாபு, ஜேசன், அடாவடி அன்சர், டிடிஎஃப் வாசன், ஷாதிகா, தன்யா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இறுதியில் ஜேசன் - வினோத் பாபு இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் போட்டியாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வினோத் பாபு, ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வினோத் பாபுவின் குரலில் இனி பிக் பாஸ் வீடு இயங்கி வருகிறது.
பிக் பாஸ் இடத்தில் இருந்து நிகழ்ச்சிக்கான டாஸ்க்குகளை வடிவமைப்பது, ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வது, பொழுதுபோக்கு குறையாமல் பார்த்துகொள்வது என பலவேறு விஷயங்களில் வினோத் பாபு கவனம் செலுத்தி வருகிறார்.
ஜூனியர் பிக் பாஸாக செயல்படும் வினோத் பாபுவுக்கு நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. ஆனால், அவரின் ஜூனியர் பிக் பாஸ் பொறுப்பு பிடிக்கவில்லை என்றால், பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து வேறு ஒருவரை ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.