வினோத் பாபு பதவி பறிப்பு! ஜூனியர் பிக் பாஸாக மாறினார் முனியம்மாள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூனியர் பிக் பாஸாக இருந்த வினோத் பாபுவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜூனியர் பிக் பாஸாக இருந்த வினோத் பாபுவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து முனியம்மாள் ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் தலைவராக ஜேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஷாதிகா உள்ளார்.
Advertisement
Advertisement
பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பிக் பாஸ் குரல் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கி வருகிறது. பிக் பாஸ் திரும்ப வரும்வரை போட்டியாளர்களில் ஒருவர் ஜூனியர் பிக் பாஸாக இருக்கலாம் என விதி வகுக்கப்பட்டுள்ளது.
இதன்படி போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து வினோத் பாபுவை ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்தனர். ஜூனியர் பிக் பாஸாக இருப்பவருக்கு நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இதனால், நேரடியாக வினோத் பாபு இறுதிப்போட்டிக்குச் செல்லக் கூடாது என்பதற்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து வினோத் பாபுவை அப்பதவியில் இருந்து நீக்கினர்.
அடுத்த ஜூனியர் பிக் பாஸாக தான் இருக்க வேண்டும் என ஜேசன் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது முனியம்மாவை ஜூனியர் பிக் பாஸாக போட்டியாளர்கள் அனைவரும் தேர்வு செய்துள்ளனர்.
ஜூனியர் பிக் பாஸாக வினோத் பாபு தனது பணிகளை சிறப்பாகச் செய்துவந்த நிலையில், அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடுவார் என்பதற்காக போட்டியாளர்கள் அனைவரும் அவரை ஒருமனதாக அப்பதவியில் இருந்து நீக்கி முனியம்மாவை ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்துள்ளனர்.
ஆனால், ஜூனியர் பிக் பாஸாக முனியம்மாள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.