FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி டீசர் எப்போது?

விடாமுயற்சி அப்டேட்...

Updated On : 29 அக்டோபர் 2024, 4:55 pm IST
- புகைப்பட உதவி - எக்ஸ்
பகிர்:

விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

படத்தின் டப்பிங் பணிகள் நேற்று (அக்.28) துவங்கியுள்ளன. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் வருகிற நவ. 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments